சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக முறையிட தலைமைச் செயலகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்துள்ளனர். அதிமுக துணைக்கொறடா ரவி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சென்றனர். சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.