புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் நேற்று மத்திய மற்றும் தென்அமெரிக்க நாடான பனாமாவுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள இந்தியர்களிடம் பேசிய சசி தரூர், “தீவிரவாதத்துக்கு எதிராக முதல்முறையாக இந்தியா பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டை கடந்து தீவிரவாத தளத்தில் ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது. இது இதற்கு முன் நாம் செய்யாத ஒன்று” என கூறி உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் தன் எக்ஸ் பதிவில், சசி தரூரின் பேச்சை இணைத்து, “என் அன்பான சசி தரூர் அவர்களே.. நீங்கள் இந்தியாவுக்கு திரும்பும் முன் பிரதமர் மோடி உங்களை பாஜவின் சூப்பர் செய்தி தொடர்பாளராக, அல்லது வௌியுறவு அமைச்சராக ஆக்க வேண்டும்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.