டெல்லி: ஈரானில் இருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து அங்கிருந்து இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தெஹ்ரானில் கல்வி பயின்றுவரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பு கருதி நாடு திரும்பியுள்ளனர்.
ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக டெல்லி வருகை
0