புதுடெல்லி: டெல்லி கன்டோன்மென்டில் உள்ள மானேஷா மையத்தில் இந்திய ராணுவம் சார்பில் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் ஸ்வீடன், நேபாளம், பிலிப்பைன்ஸ், எகிப்து உட்பட சுமார் 70 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு இணை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ் ராணா பங்கேற்று ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக செயல்பட்டது குறித்து விளக்கமளித்தார். இந்த புதிய யுக போரில் ராணுவத்தின் மேன்மை மூலமாக இந்தியாவின் நிரூபிக்கப்பட்ட வலிமை மற்றும் தேசிய உறுதி எடுத்துக் காட்டப்படுகின்றது. உறுதிப்படுத்தப்பட்ட தீவிரவாதத்துடன் தொடர்புடைய இலக்குகளை தேர்ந்தெடுப்பதற்கான திட்டமிடல் செயல்முறை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து 70 நாட்டு அதிகாரிகளிடம் இந்தியா விளக்கம்
0