புதுடெல்லி: ரா உளவுப்பிரிவின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பஞ்சாபை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பராக் ஜெயினும் ஒருவர். விமான ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து வரும் பராக் ஜெயின் ரா என்று அழைக்கப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரா தலைவராக இருந்து வரும் ரவி சின்ஹா நாளையுடன் (ஜூன்30)ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து பராக் ஜெயின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். நாளை முதல் இவர் ரா தலைவராக பதவியேற்கிறார். பராக்கை நியமனம் செய்யும் முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாபில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தபோது பராக் ஜெயின் பணியானது குறிப்பிடத்தக்க அளவில் செயல்பட்டார்.