அமிர்தசரஸ்: பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையின் 39வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி பொற்கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. சிம்ரஞ்சித் சிங் மான் எம்.பி தலைமையில் கூடியிருந்த அகாலி தளம்(அமிர்தரசரஸ்) கட்சியினர் காலிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டனர். மேலும் சீக்கிய தீவிரவாதியான ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் உருவப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய தால் கல்சா அமைப்பினர் காலிஸ்தான் ஆதரவு முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.