Sunday, April 21, 2024
Home » நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

by Ranjith

திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பத்தில் பழைய கட்டிடத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நகராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் பழைய கட்டிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டு வந்ததால், இதனை புதியதாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் அமைக்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்ககம் சார்பில் ரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் கட்டிடப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்நிலையில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் குத்துவிளக்கை ஏற்றி வைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். இதில் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், ஆணையர் சுபாஷினி, முன்னாள் நகர மன்ற தலைவர் பொன்பாண்டியன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகர் நல அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் சித்ரா விஸ்வநாதன், கு.பிரபாகரன், நீலாவதி பன்னீர்செல்வம், தனலட்சுமி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi