பெங்களூருவைச் சேர்ந்த ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம், ரோர் என்ற எலெக்ட்ரிக் டூவீலரை சந்தைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் ரோர் இஇசட் மற்றும் ரோர் என இரண்டு வேரியண்ட்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 100 சிசி திறன் கொண்ட பைக்குகளை விரும்புபவர்களுக்காக புதிதாக ஓ100 என்ற புதிய எலக்ட்ரிக் பைக்கை சந்தைப்படுத்தப்படுத்த உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது சந்தையில் உள்ள ரோர் பைக்குகளின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.90,000 எனவும், டாப் வேரியண்ட் ரூ.1.5 லட்சம் எனவும் உள்ளது. புதிய பைக் இதை விட குறைந்த விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.