ஊட்டி: ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழையால் கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மழை காரணமாக அனைத்து வனப்பகுதிகளும், புல்வெளிகளும் பசுமை திரும்பி உள்ளது.
அதன்படி ஊட்டி அருகே உள்ள கேர்ன்ஹில் சூழல் சுற்றுலா மையத்தில் உள்ள வனப்பகுதி தற்போது பச்சை பசேல் என மாறியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பசுமை நிறைந்த கேர்ன்ஹில் சோலையை கண்டு மகிழ்ச்சி அடைவதுடன் அதை சுற்றி பார்க்கின்றனர். மேலும் பசுமை நிறைந்த இந்த சோலையின் நடுவே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.