Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டியில் என்.சி.சி மாணவிகள் மலையேற்ற பயிற்சி முகாம் நிறைவு

ஊட்டி : நாடு முழுவதிலும் இருந்து வர கூடிய என்சிசி மாணவிகளுக்கான மலையேற்ற பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.இப்பயிற்சியின் நோக்கம் உடற்பயிற்சியை ஊக்கப்படுத்துதல், மனவலிமை, தலைமை பண்பை மேம்படுத்துதல், தன்னார்வத்தை தூண்டுதல், தேசிய ஒருமைபாட்டை வளர்த்தல் போன்றவற்றை செய்வதுடன் வாழ்வில் உயர் பதவிகளை அடைய வழிவகை செய்வதாகும்.

அகில இந்திய என்.சி.சி., மாணவியா்களின் 38ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாமின் முதல் குழுவின் மலையேற்ற முகாம் ஊட்டியில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, கோவா, லட்சதீவு, அந்தமான் நிக்கோபர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 510 பள்ளி, கல்லூரி என்.சி.சி மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் முத்தோரை பாலாடா ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளியில் தங்கி நடைபயணம் மேற்கொண்டனர். காலை 8 மணியளவில் புறப்பட்டு நாள்தோறும் 20 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தின் போது ஸ்டாரபெரி விவசாய பண்ணை, பழங்குடியினர் ஆய்வு மையம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் பழமை வாய்ந்த மலைரயிலிலும் பயணித்து மகிழ்ந்தனர்.

இதுதவிர ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பழங்குடியினர் அருங்காட்சியகம், வெலிங்டன் ராணுவ மையம் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.

முதல் குழுவின் மலையேற்ற மலையேற்ற பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து 2வது குழுவின் முகாம் வரும் 13ம் தேதி துவங்குகிறது.