உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. சுற்றுலா வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. உதகைக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும்; கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி, அரசு பேருந்து, ரயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு ஐகோர்ட் கட்டுப்பாடு
0