ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே லச்சுவாக்கம் – பெரம்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை 1986ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையின் பரப்பளவு 5 ஏக்கர் ஆகும். இந்த மருத்துவமனைக்கு பெரம்பூர், லச்சுவாக்கம், பாலவாக்கம் , சூளைமேனி, சென்னங்காரணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பொது சுகாதாரம் மற்றும் மகப்பேறு போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்வார்கள். இந்த மருத்துவமனையை சுற்றி புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் போன்றவை மருத்துவமனைக்குள் வருகிறது. மேலும் ஆடு, மாடுகள் மேய்கிறது. இதனால் இந்த மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் எனவும், இந்த மருத்துவ மனையில் 2 டாக்டர், 20 நர்ஸ்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊத்துக்கோட்டை – பெரியபாளையம் இடையே உள்ளது. இந்த மருத்துவமனைக்கு அதிக அளவு நோயாளிகள் வந்து செல்கிறார்கள் எனவே இந்த மருத்துவ மனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.