என்ன இதெல்லாம் என பலரும், இதுதான் எங்களுக்குத் தெரியுமே என சிலரும் சொல்வீர்கள். குறிப்பாக இணைய உலகில் படு பிஸியான பேர்வழி எனில் இந்த ஹேஷ்டேக் உங்களுக்கு நன்கு பரிட்சயம் எனலாம். பலரின் திங்கட்கிழமை சோம்பல் முதல், தன்னம்பிக்கைத் தரும் டாக்குகளாக இணையத்தில் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கும் ஹேஷ் டேக் என்கிறார்கள் ஃபேஷன் விரும்பிகள். என்ன இந்த ரெண்டு ஹேஷ்டேக் தன்னம்பிக்கைக் கொடுக்குமா? விவரிக்கிறார் செலிபிரிட்டி ஃபேஷன் டிசைனர் ஃபரிதா
#OOTD – Outfit of the day!
அதாவது அலுவலகமோ, கல்லூரியோ, அல்லது எங்கேயேனும் பயணமோ,
பார்ட்டியோ அன்றைய தினம் நாம் உடுத்தும் உடைதான் நம் மனநிலையை பாதி சீராக்கும் கருவி. யாரெனும் நம் உடையைப் பார்த்து ‘எங்கே வாங்கினீங்க?’ எனக் கேட்டாலே போதும் அன்றைய தினம் பாசிட்டிவ் வைப் தானாகவே தொற்றிக் கொள்ளும். அந்த கான்செப்ட்டைதான் நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டு நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் ஒரு ஐடியா இந்த #OOTD. எந்த உடையானாலும் சரி நல்லா தயாராகிட்டு ஒரு ஸ்டைலான போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் துவங்கி, டுவிட்டர், முகநூல் என போஸ்ட் செய்து உடன் #OOTD என டேக் செய்தாலே போதும் .அட 10 லைக்ஸ் வந்தாலும் ஒருவித சந்தோஷமான மனநிலையை உண்டாக்குமே. பொதுவாகவே நம்மை நாமே பாசிட்டிவ்வாக வைச்சிக்க இந்த மாதிரி நிறைய எளிய வழிகள் இணையத்தில் அதிகம். ஆனால் நாமதான் ஸ்டேட்டஸில் கூட அழுது வடிந்து, சோக கீதம் பாடுவதே வேலையாய் வைச்சிருக்கோம்’ என்னும் ஃபரித #OOTW என்றால் என்ன மேலும் தொடர்ந்தார்
#OOTW- Outfitof the Week
பொதுவாகவே ஃபேஷன் விரும்பிகள், சமூக வலைதள இன்ப்ளூயன்சர்கள், ஃபேஷன் பிளாக்கர்கள், விலாக் கிரியேட்டர்கள், டிசைனர்கள் எல்லாம் அதிகம் பயன்படுத்தும் டேக்குகள் இவை. அந்த வாரத்தில் ஏதேனும் புதிய உடை, அல்லது அந்த வாரத்தில் அவங்க அணிந்த சிறந்த உடைகளை அந்த வாரத்தின் சிறப்பு உடையாக போஸ்ட் செய்வாங்க. இக்கால டிரெண்டில் நம்மைச் சுத்தி என்னென்ன ஃபேஷன் டிரெண்ட் பரவுது, இன்னைக்கு லேட்டஸ்ட் என்ன, ஃபேஷன் ஐடியா ஏதேனும் கிடைக்கிதா, பழைய உடையை எப்படி டிரெண்டிங்காக பயன்படுத்தலாம் இப்படி நிறைய ஐடியாக்கள் இந்த ஹேஷ்டேக்குகளில் போஸ்ட் ஆகும். மேலும் நீங்களும் இந்த டேக்கில் நிறைய ஃபேஷன் சார்ந்த
ஐடியாக்களையும் பெறலாம்.
இந்த டேக்குகள் பொதுவாகவே மனநிலை மாற்றங்களை உண்டாக்குமா? தொடர்ந்தார் ஃபரிதா.
இந்த டேக் மட்டும் இல்லை, பொதுவாகவே இணையத்தில் நிறைய டேக்குகள் பாசிட்டிவ் வைப்ரேஷன் உண்டாக்கும். நம்ம எப்போதுமான உடைதான் போட்டுக்கிட்டாலும், அதை போட்டோ எடுத்து புகைப்படமாக பதிய ஒரு நாலு பேரேனும் லைக் போடுவாங்க. தானாகவே ஒரு பாசிட்டிவ் மனநிலை உண்டாகும். போலவே நம்ம உடை எங்கே வாங்கினீங்க, எவ்வளவு எனக் கேட்டாலே அடுத்து அதை அவங்க வாங்கப் போகிறார்கள்ன்னு அர்த்தம். இதனால் கிட்டத்தட்ட எதோ ஒரு குழுவுக்கு நாம் அன்றைய நாளுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியிருப்போம்.
சில நம் உடைகள அப்படியே காப்பி செய்வாங்க, அல்லது அதையே அப்படியே வாங்கி போட்டுக்குவாங்க. எனில் யாரையோ மறைமுகமாக நாம தூண்டுகிறோம்ன்னு அர்த்தம். நாம கவனிக்கப் படறோம்ன்னு அர்த்தம். ஆன்லைன் ஷாப்பிங் உலகைப் பொருத்தவரை எல்லா உடைகளும், ஆக்சரீஸ்களும் எல்லாருக்குமே சுலபமாகக் கிடைக்கும். அதையும் மீறி நாம என்ன ஸ்பெஷல் ஸ்டைலிங் செய்கிறோம். நாம ஒரு உடையை எப்படித் தனித்துவமா பயன்படுத்துகிறோம். நம்மைப் பார்த்து மற்றவர்கள் எப்படி இன்ஸ்பிரேஷன் ஆகறாங்க இதெல்லாம் அன்றைய நாளை மகிழ்ச்சியா மாத்தும். அதே சமயம் எப்பவும் 30 லைக்ஸ் வரும், இந்த முறை 10 தான் வந்துச்சுன்னு மன உளைச்சலும் சில நேரங்களில் கொடுக்கும். ஆனால் அதையும் பாசிட்டிவ்வா மாத்திகிட்டு என்ன மாற்றம் செய்யலாம்ன்னு யோசிச்சாலே நமக்கு
வெற்றிதான்.
இதிலே செலிபிரிட்டிகள், பணம் அல்லது புராடெக்ட் வாங்கிக் கொண்டு இணையத்தில் போஸ்ட் செய்யும் போது இதனால் வருமானமும் உண்டாகும். சில பிராண்டுகளும் நமக்கு இலவச புராடெக்ட்கள் கொடுக்க முன்வருவார்கள். கஸ்டமர்கள்தான் இனி மாடல்கள் என்கிற காலத்தில் இந்த OOTD, OOTW போன்ற டேக்குகள் கிட்டத்தட்ட பணம் செய்யும் டேக்குகளாகவும் உள்ளன. நம்மை நாமே ஏதோ வழியில் உற்சாகப் படுத்திக்கிறதில் தவறில்லை. அதிலும் பெண்கள் ஒரு பக்கம் அலுவலகம், இன்னொரு பக்கம் குடும்பம், குழந்தைகள் என எப்போதும் பிஸியான வாழ்வில் இருக்க, அவர்களுக்கான ரிலாக்ஸிங் பூஸ்டர்கள்தான் இம்மாதிரியான டிரெண்டிங் போஸ்ட்கள், மற்றும் வீடியோக்கள்.
– ஷாலினி நியூட்டன்