அரக்கோணம்: ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழந்ததால் ரயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம்- சித்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயதுள்ள ஆண் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. விசாரணையில், சடலமாக கிடந்த நபர் அரக்கோணம் சித்தேரி கிராமத்தை சேர்ந்த தினகரன் என்பதும், தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவர், ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தினகரன் தற்கொலைக்கு இதுதான் காரனமா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது கடன் மற்றும் குடும்ப பிரச்னை காரணமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு ரயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை
0