Thursday, February 29, 2024
Home » ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்ததால் விரக்தி!: ரயில் முன் பாய்ந்து பள்ளி ஆசிரியர் தற்கொலை.. மதுரையில் பரபரப்பு..!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்ததால் விரக்தி!: ரயில் முன் பாய்ந்து பள்ளி ஆசிரியர் தற்கொலை.. மதுரையில் பரபரப்பு..!!

by Kalaivani Saravanan

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்த பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் முன் பாய்ந்து தனியார் பள்ளி ஆசிரியர் சரவணன்(56) தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் இன்று அதிகாலை ஒருவர் இறந்து கிடப்பதாக அவ்வழியே சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் மதுரை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தவர் சிறப்பு நிற சட்டை அணிந்திருந்ததால் அதனை வைத்து விசாரணையை துவங்கினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சரவணன் என்பதும், இவர் திருமங்கலம் விமான நிலைய சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததும், இவரது மனைவி திருமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததும் கண்டறிந்தனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

ஆசிரியர் சரவணன் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.8 லட்சம் பணத்தை இழந்ததாகவும், அதன் காரணமாக கடந்த சில நாட்களாக மன விரக்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மனைவியிடம் வெளியே செல்வதாக கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து வெளியேறிய சரவணன், திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், சென்னையில் இருந்து திருப்பரங்குன்றம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று காலையில் ரயில் தண்டவாளத்தில் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து ஆசிரியரே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

9 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi