டெல்லி: ஆன்லைன் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்களிடம் டெல்லி சிறப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றச்சாட்டை அடுத்து பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.