வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கீழ்கொல்லப்பள்ளி அருகே ட்ராக்டரில் சிக்கி சுதாகர் (45) என்பவர் உயிரிழந்துள்ளார். தனது நிலத்தில் நடக்கும் கட்டடப் பணிகளுக்கு கற்கள் ஏற்றி வந்த போது, மேடான பகுதியில் ஏற்றும் முயற்சியில் ட்ராக்டர் செங்குத்தாக தூக்கியதால், பின்னால் இருந்த ட்ரைலருக்கும் ட்ராக்டருக்கும் இடையே சிக்கி அவர் உயிரிழந்தார்.