உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர் பஜார் என்ற பகுதியில் இருசக்கர வாகனமும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பைக்கை ஓட்டிவந்த மித்ரன் (17) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் சாதிக் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. லாரி ஓட்டுநர் ப்ரேக் பிடிக்கும்போது ஸ்டேரிங் லாக் ஆனதால் விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.