ஈரோடு: விசைத்தறியாளர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அரசின் விலையில்லா சேலையை பாலிஸ்டர் நூலை தவிர்த்து காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால் 50,000 விசைத்தறிகள் நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் விசைத்தறி உற்பத்தியாளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.