கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீரப்பாளையம், பஞ்சயாத்து யூனியன் அலுவலகத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு சமூக நல விரிவாக்க அலுவலராக பணிபுரிந்த பூங்கோதை என்பவர், சிதம்பரம் வட்டம், கனகசபை நகரை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுபத்ராவுக்கு அரசால் வழங்கும் திருமண உதவி திட்டத்திற்கு ரூ.20,000-ம் காசோலை வழங்கிட ரூ.1,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக நடராஜன் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்ததன் பேரில், , சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கோதை என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடந்த 08.02.2010 அன்று கடலூரில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நடராஜன் என்பவரிடம் பூங்கோதை ரூ.1,000- லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, தேவநாதன் மேற்பார்வையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் பால ரேவதி ஆஜராகி கடலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இறுதி விசாரணை முடிந்த நிலையில் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி பிரபாகரன் லஞ்சம் வாங்கிய கீரப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் பணியாற்றிய சமூக நல விரிவாக்க அலுவலர் பூங்கோதை என்பவரை குற்றவாளி என தீர்பளித்து, ஊழல் தடுப்பு சட்டம், 1988 பிரிவு 7 மற்றும் 13 ன் கீழ் தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 4 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.