புதுடெல்லி: ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `சிபிஐ டிஐஜி மொகித் குப்தாவின் பதவிக் காலம் செப்டம்பர் 3, 2024 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதே போல, சிபிஐ எஸ்பி.க்கள் ரகுராமானுஜன் மற்றும் வித்யூத் விகாஷ் ஆகியோரது பதவி காலமும் நீட்டிக்கப்படுகிறது. ரகுராமானுஜத்துக்கு செப்டம்பர் 15, 2025 வரை, 2 ஆண்டுகளுக்கும், வித்யூத்தின் பதவி காலம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பிப்ரவரி 19, 2024 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.