கடலூர்: பண்ருட்டி 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது சுந்தரவேலுவை பண்ருட்டி ஆய்வாளர் வேலுமணி துப்பாக்கியால் சுட்டுள்ளார். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு காயமடைந்த சுந்தரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுந்தரவேல் தாக்கியதில் 2 காவலர்கள் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்
0