காரைக்குடி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்தங்களை எளிதில் செய்ய முடியாது என ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டி: அரசியல் சாசனத்தில் இன்று வரை இந்தியா, அதாவது பாரத் மாநிலங்களை அடங்கிய ஒரு ஒன்றியமாக இருக்கும் என உள்ளது. இவர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது இந்தியா எனவும், இந்தியில் எழுதும்போது பாரத் எனவும் எழுதலாம். நாங்கள் பாரத்துக்கு விரோதிகள் அல்ல.
ஆனால் பாஜ இந்தியாவுக்கு விரோதியை போல நடந்து கொள்கிறது. 7 தொகுதி இடைத்தேர்தலில் பாஜவுக்கு எதிராக அந்தந்த மாநில பிராந்திய கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவை தேர்தலில் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு அகற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அரசியல் சாசன திருத்தத்தை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது. அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் ஐந்து திருத்தங்களை செய்ய வேண்டும். அதை செய்ய முடியும் என தோன்றவில்லை. மாநில அரசுகளை பலவீனப்படுத்த ஒரே நாடு, ஒரே தேர்தலை கொண்டு வர நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.