சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் மாநில உரிமைகளை பறித்துவிடும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் தமீமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டமன்றங்களை மாநகராட்சி அளவுக்கு சுருக்கி அனைத்து உரிமைகளையும் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை பறித்துவிடும். தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து மொட்டையடித்து அனுப்பியது மனித உரிமை மீறல். மீனவர்கள் கைது தொடர்பாக இலங்கை தூதரை அழைத்து ஒன்றிய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.
Advertisement


