சேலம்: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரன் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த ஒண்டிவீரன், பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்தார். இவர் ஆங்கிலேய படைகளை தனியாக சென்று அழித்ததால் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.