சென்னை: தென்மலைப் போரில் வெளிக்காட்டிய ஒப்பிலா வீரத்தால் வரலாற்றில் நிலைத்துவிட்டவர் விடுதலைத் தீரர் ஒண்டிவீரன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “தென்மலைப் போரில் வெளிக்காட்டிய ஒப்பிலா வீரத்தால் வரலாற்றில் நிலைத்துவிட்ட விடுதலைத் தீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எம் புகழ்வணக்கம். கப்பம் கட்ட மறுத்து ஆங்கிலேயருக்கு எதிரான போர்களில் அவர் பெற்ற வெற்றிகள் நம்முள் என்றும் சுயமரியாதைச் சுடர் அணையாமல் காக்கும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.