சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக பொது செயலாளர்): ஓணம் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகள். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.ராமதாஸ்(பாமக நிறுவனர்): ஓணம் திருநாளை கொண்டாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தமிழ்நாட்டில் வாழும் மலையாளம் மொழி பேசும் மக்களுக்கும் மற்றும் கேரளா மாநிலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும், நலன்களும் பெற்று வாழ வேண்டும்.
அன்புமணி (பாமக தலைவர்): திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மேலும் சமக தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் அபூபக்கர் உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.