டெல்லி: வயநாடு செல்லும் வழியில் நாளை நீலகிரி வருகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி. பதவி தகுதிநீக்கம் கைதுசெய்யப்பட்ட நிலையில் முதல்முறையாக தனது வயநாடு தொகுதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை காலை 9.15 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி என்று தகவல் வெளியாகியுள்ளது.
உதகை சென்று உள்நாட்டு சாக்லேட் தயாரிப்பு குறித்து கேட்டறிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தநாடு மந்து பழங்குடியின மக்களுடன் கந்துரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி 12,13 ஆகிய இரு தேதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை அவர் நீலகிரி மாவட்டம் வந்தடைந்து இங்கு இருந்து வடநாடு செல்லவுள்ளார்.
குறிப்பாக உதகைக்கு வரும் ராகுல் காந்தி கே.பி. பகுதியில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிடுகிறார். அங்கு உள்ள விவசாயிகளுடன் கனத்துறையாடுகின்றார் மேலும் அங்கு இருந்து புறப்பட்டு உதகை அருகே உள்ள தொடர் இனமக்கள் வசிக்கும் முத்துநாடு மந்தியம் என்ற பகுதிக்கு சென்று அங்கு அவரகள் அளிக்கும் வரவேற்பைஏற்றப்பிறகு அங்கு அவர் மக்களுடன் கலந்துரையாடிய பின்பு அங்கு இருந்து மாலை வயநாடு செல்கின்றார்.
வயநாடு செல்லும் முன்பு குறிப்பாக உதகையில் இருந்து செல்லும் பொழுது தெப்பக்காடு யானை முகாமுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யபபடவில்லை தொடர்ந்து நாளை மாலை வயநாடு செல்வத்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.