சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு தேர்வுகளுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள் இணையதளத்தில் (www.tnpsc.com) வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 10.9.22 அன்று நடைபெற்ற செயல் அலுவலர்- கிரேடு 3 தேர்வு (குரூப் 7பி பணிகள்), 11.9.22 அன்று நடைபெற்ற செயல் அலுவலர் கிரேடு 4 (குரூப் 8 பணிகள்) தேர்வு, 28.1.23 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-3 (குரூப் 3ஏ பணிகள்), கடந்த 29.1.23 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, 27.5.23 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு, கடந்த 6.12.24, 7.1.24 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.