சென்னை: ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் தெரிவித்திருக்கிறார். ஸ்டிரைக் அறிவித்துள்ள தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துக்கு 5% பேருந்துகளே உள்ளன. தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் இணையதளத்தில் 90% டிக்கெட் முன்பதிவு நடந்துள்ளது என்று மாறன் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.