சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை விடுவிக்கக் கோரி இன்று மாலை முதல் வேலைநிறுத்தம் என அறிவித்திருந்தனர். வேலைநிறுத்தம் வாபஸ் ஆனதால் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படுவது உறுதியானது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!!
175