சென்னை: சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினரின் அதிகாரப்பூர்வ கட்டண விவரம் அறிவித்துள்ளனர். சென்னை – திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1610, அதிகபட்ச கட்டணம் ரூ.2,430. சென்னை-மதுரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1930, அதிகபட்ச கட்டணம் ரூ3,070. சென்னை – கோவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.2050, அதிகபட்ச கட்டணம் ரூ. 3,310. சென்னை-நெல்லை – குறைந்தபட்ச கட்டணம் ரூ.2380, அதிகபட்ச கட்டணம் ரூ.3,920. சென்னை – தூத்துக்குடி குறைந்தபட்ச கட்டணம்ரூ.2320, அதிகபட்ச கட்டணம் ரூ. 3810 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.