தேவையானவை:
ஓமம், வெந்தயம் – தலா 1 ஸ்பூன்,
மிளகு- 10,
வரமிளகாய் – 3,
கொத்தமல்லி விதை – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப,
பூண்டு – 4 பல்,
புளி – ஒரு எலுமிச்சை அளவு.
செய்முறை:
ஓமம், சீரகம், மிளகு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை அனைத்தையும் தனித்தனியாகக் கருகாமல் வறுக்கவும். புளியையும் வெறும் வாணலியில் புரட்டி எடுக்கவும். அனைத்தையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், பெருங்காயம் தாளித்து அதிலேயே பூண்டையும் சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதில் ஒரு கப் நீர் விட்டு கரைத்து தாளித்ததில் கொட்டி உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போகக் கொதித்ததும் இறக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.