* ‘நல்ல உடல்தகுதியுடன் இருந்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன்’ என்று இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் (32 வயது) கூறியுள்ளார்.
* இளம் வயதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அமன் ஷெராவத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த பதக்கத்தை ஷெராவத் தனது பெற்றோருக்கும் தேசத்துக்கும் அர்ப்பணித்துள்ளார்.
* 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிசுடுதல் கலப்பு குழு பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் (22 வயது), அரியானா விளையாட்டுத் துறையில் தனக்கு வழங்கப்பட்ட துணை இயக்குனர் பதவியை ஏற்க மறுத்துள்ளார். தொடர்ந்து துப்பாக்கிசுடுதலில் கவனம் செலுத்த உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சரப்ஜோத் கூறியுள்ளார்.
* இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற்ற கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ‘காயம் காரணமாக அவதிப்படாமல் இருந்திருந்தால் ஒலிம்பிக் போட்டியில் இன்னும் 4 மீட்டர் தூரத்துக்கு அதிகமாக ஈட்டியை எறிந்திருப்பேன். அறுவைசிகிச்சை செய்துகொள்வது குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளேன்’ என்று நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.