பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வீழ்த்தினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியா அசத்தியது. தரவரிசை பட்டியலில் உலகின் நம்பர் 1 வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார்.