* ஆலிவ் ஆயிலில் மோனோ சாச்சுரேட் என்னும் கொழுப்பு உள்ளது. இது கொலஸ்டிராலை கட்டுப்படுத்தி இளமை நீட்டிக்க வழி செய்கிறது.
* கேன்சர், பிளட் ப்ரெஷரிலிருந்து நம்மை காக்கிறது.
* அல்சர், வாய் கோளாறை சீர்படுத்தும்.
* மூளை, எலும்பு வளர்ச்சியை துரிதமாக்கும்.
* வைட்டமின் A,C,E, ஃபோலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்கள் கொண்டதால், கூந்தல் வளர்ச்சிக்கும், தேக செழுமைக்கும் ஆலிவ் ஆயில் உதவும்.
* சிறுநீரகக் கல் ஏற்படாமல் தடுக்கும்.
* ஆரஞ்சு பழநாறுடன் சில சொட்டுகள் ஆலிவ்ஆயில் கலந்து சாப்பிட நுரையீரல் பாதிப்புகள் நீங்கும்.
* பொரித்த கருஞ்சீரகத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து முகத்தில் தடவிவந்தால் முகம் பொலிவு பெறும்.
* ஆலிவ் ஆயிலுடன் பாதாம் எண்ணெயை கலந்து கண் கீழ் பூசி வர, கண்ணைச் சுற்றி வரும் கருவளையங்கள் மறையும்.
* ஆலிவ் ஆயிலை இளஞ்சூடாக்கி முடியில் தடவி மசாஜ் செய்ய, முடி உதிர்வது நிற்கும்.
* சொர சொரப்பான உழைக்கும் கரங்களுக்கு ஆலிவ் ஆயில் அருமருந்து. உப்புப் பொடியுடன் ஆலிவ் ஆயில் கலந்து கைகளில் தடவி வர, கரங்கள் மென்மையாகும்.சருமத்திற்கும், உடலுக்கும் நன்மை தரும் ஆலிவ்ஆயிலை பயன்படுத்தி நலம் பெறுவோம்.
ஆஹா ஆலிவ் ஆயில்
previous post