சென்னை: மூதாட்டி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இது, கண்டனத்திற்குரியது. இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூதாட்டிக்கு பாலியல் கொடுமை எடப்பாடி கண்டனம்
0