வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த அங்கராங்குப்பத்தை சேர்ந்தவர் யசோதா(69). இவர் நேற்று முன்தினம் தனது 10 வயது பேரனுடன், சின்ன வடுகன்தாங்கலில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்கு அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது பனைமரத்தில் இருந்து விழுந்த ஓலையில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் வெளியேறியது.
பேரனை தேனீக்கள் கொட்டிவிடாதபடி தனது புடவையால் மூடிக்கொண்டார். ஆனால், தேனீக்கள் யசோதாவை சரமாரி கொட்டியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் யசோதா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். பேரனை புடவையால் மூடி காப்பாற்றிய மூதாட்டி, தேனீக்கள் கொட்டி பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.