தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை காந்தி நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சேகர் (64), நேற்று வீட்டின் அருகே உள்ள தொட்டியில் குப்பை கொட்டுவதற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கிருந்த ஒரு மாடு, அவரை ஆவேசமாக முட்டி தூக்கி வீசியது. இதில் சேகர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் திருவொற்றியூர் பகுதியில் மாடு முட்டி ஒருவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.