பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில், ‘‘சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அனைத்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்கள் தற்போது மாதந்தோறும் ரூ400 ஓய்வூதியமாக பெற்று வருகிறார்கள். இனி பயனாளர்கள் ரூ.400க்கு பதிலாக ரூ.1100 ஓய்வூதியமாக பெறுவார்கள் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை மாதம் முதல் அனைத்து பயனாளிகளுக்கும் அதிகரித்த விகிதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும். ஒய்வுதியத் தொகையானது ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பயனாளர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும். அரசின் இந்த முடிவு பயனாளிகளுக்கு உதவும். அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும். இது அரசு முதன்மையான முன்னுரிமையாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் மாதம் ரூ.700 உயர்வு: பீகார் அரசு உத்தரவு
0