சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஏற்கனவே கட்டணக் கொள்ளை என பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்ற நிலையில், ‘பீக் அவர்ஸ்’ கட்டண உயர்வு 2 மடங்காக உயர்த்திகொள்ள அறிவித்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை ஒன்றிய, மாநில அரசு கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓலா, ஊபர் கட்டண உயர்வுக்கு அனுமதி சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்
0