சென்னை: பைக் டாக்சிகளை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, உபேர் ஓட்டுனர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓட்டுனர் சங்கத்தினர் கூறியதாவது: ஓலா, உபேர் செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்.
வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற அமைச்சரின் சட்டசபை அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். எனவே, இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 16ம் தேதி (இன்று) முதல் 3 நாட்களுக்குத் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.