அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காவிரி ஆற்றில் இருந்து கிணறு அமைவிடங்களின் தூரம் குறித்த விவரங்களை தெரிவிக்கவும் ஓ.என்.ஜி.சி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.