காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவுக்கு லஞ்சம் வாங்குவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து போலீசார் நேற்று மாலை அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.