நாகர்கோவில்: நாகர்கோவில் இடலாக்குடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது பணியில் இருந்த சார்பதிவாளர் (பொறுப்பு)ஆன்றோ மெஸ்மாலின் அலுவலகத்திலும், அவரது பைக்கிலும் சோதனை நடத்தப்பட்டது. பைக்கில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் இருந்தது. மேலும் அலுவலகத்தில் 61 ஆயிரம் காணக்கில் வராத பணம் இருந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார், சார் பதிவாளர் உட்பட 6 பேர் மீதும் லஞ்ச வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.