மதுரை: விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அமைத்த உயர்மட்டக் குழுவை முறையாக அரசாணை நடைமுறைப்படுத்தியது குறித்து அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த உயர்மட்ட குழுவை அமைக்க ஐகோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவிட்டும் இதுவரை உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை என மனுதாரர் புகார் அளித்துள்ளார். உயர்மட்டக் குழு என்பது ஒரு விஷயத்தை நீர்த்துப் போகச் செய்வதுதான் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.