புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவர் கோபால்பூரில் உள்ள கடற்கரைக்கு இரவு நேரத்தில் தனது காதலனுடன் வந்தார். இருவரும் தனிமையான இடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 10 பேர் கும்பல், காதலனை கட்டி வைத்து விட்டு கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கோபால்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்தனர். அதை தொடர்ந்து மேலும் 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு வெளிமாநிலத்திற்கு தப்ப முயன்ற போது போலீசார் பிடியில் சிக்கினர். கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேர் சிறுவர்கள் என்று கூறப்படுகிறது.