புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம்,பாலி குடா வன பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் உடனே அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். போலீசார் அங்கு சென்றதும் போலீசாரை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிசண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவரான மங்கு தடை செய்யப்பட்ட சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்பின் வட்டார உறுப்பினராக இருந்தார். இன்னொருவரான சந்தன் சிபிஐ(மாவோயிஸ்ட்) உறுப்பினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசாவில் என்கவுன்டர் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொலை
0