சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டுவந்த நிலையில் 3 பேர் பத்திரமாக உள்ளது தெரியவந்தது. கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் பாதுகாப்பாக ஊர் திரும்பி உள்ளனர். கமல் என்பவர் ரயிலில் பயணம் செய்யவில்லை என்பது சக பயணிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா, அருண் ஆகிய 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மாநில கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.