புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாநகராட்சியின் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொடுக்க அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென்று அலுவலகத்துக்குள் பாஜ கவுன்சிலர் ஜீவன் ரவுத் தலைமையில் புகுந்த சிலர் அங்கு பணியில் இருந்த கூடுதல் ஆணையர் ரத்னாகர் சாஹூவிடம் பாஜ தலைவர் ஜெகநாத் பிரதானை மதிக்க மாட்டாயா?என்று கேட்டு சரமாரியாக அடித்து, உதைத்தனர்.
தொடர்ந்து அவரை தர, தரவென அலுவலகத்துக்கு வௌியே இழுத்து சென்றனர். இந்த தாக்குதல் தொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாஜ கவுன்சிலர் ஜீவன் ரவுத் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.